ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல்
அரசியல்இலங்கைசெய்திகள்

வீதியில் இறங்கத் தயார்!!

Share

மக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை தற்போதைய அரசாங்கம் பறித்துள்ளமைக்கு எதிராக தாம் வீதியில் இறங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தலை நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான அரச பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த நிவிதிகல நிமல் அமரசிறிக்கு குளியாப்பிட்டியவில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.

தனது அரசியல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் பல்வேறு மாற்று அபிப்பிராயங்கள் காணப்படுகின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்க்கட்சியில் செயற்படும் சகோதர அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னனி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதலை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

மிருகத்தனமான,சர்வாதிகார,எதோச்சதிகார அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலைக்கு ஜனாதிபதியும் அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

ஜஜனநாயகத்தைக் கோரி வீதியில் இறங்கிய நிமல் அமரசிறி மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்திகண்டிப்பதாகவும், இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி தேர்தலைக் கோரி மக்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஏகமானதாக ஒன்றுபடுவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் தேர்தலுக்கு பணம் இல்லை எனவும், பணம் வழங்க முடியாது எனவும், பணம்இருந்தாலும் தேர்தலை நடத்த முடியாது என்று கூறினாலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரத்தை தம்மிடம் பெற்று நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும்  குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...

world 199
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு கால சுற்றிவளைப்பு: 400 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு...