செய்திகள்அரசியல்இலங்கை

அரசிலிருந்து வெளியேறத் தயார்! – மஹிந்த அமரவீர

mahinda amaraweera 6756
Share

கட்சி மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும்பட்சத்தில் நாளை வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறுவதற்கு நாம் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று நடைபெற்ற கட்சி கிளைக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசிலிருந்து வெளியேறாமல் ஏன் இன்னும் அரசுடனேயே இருக்கின்றனர் என சிலர் கேள்வி கேட்கின்றனர். எமது கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும் பட்சத்தில் நாளையே பதவிகளை துறந்து வெளியேறுவதற்கு தயார்.

எமது முதுகில் சவாரி செய்துவிட்டு, எம்மை கட்டுப்படுத்த முற்படுகின்றனர். எனவே, உள்ளாட்சி மன்றங்களில் நடக்கும் விடயங்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக முடிவெடுங்கள். கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...