rtjy 257 scaled
இலங்கைசெய்திகள்

மக்களை அடக்கவே புதிய சட்ட அறிமுகம்: சாணக்கியன்

Share

மக்களை அடக்கவே புதிய சட்ட அறிமுகம்: சாணக்கியன்

மக்களை அடக்குவதற்கே இலங்கை அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய முனைகிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஒன்லைன் சேப்டி கொமிஷன் என்பது, நாட்டினுடைய ஜனாதிபதி இந்த கொமிஷன் சபைக்கு ஐந்து பேரை நியமிப்பார்.

அந்த ஐந்து பேருக்கும் மக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பார்கள். அதில் வருகின்ற முறைப்பாட்டை ஆராய்ந்து பார்த்து உரிய இடத்திற்கு தெரியப்படுத்தி அதனை அகற்றாவிட்டால் குறித்த நிறுவனத்தை இரத்து செய்ய முடியும் இல்லாவிட்டால் தண்டப்பணம் அறவிட முடியும்.

இவ்வாறான சட்டம் வருமாக இருந்தால் இந்த ஐந்து பேரும் மாத்திரமே எது உண்மை எது பொய் என அறிவிப்பார்கள். அவ்வாறான நிலை ஏற்படப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள 21 மில்லியன் மக்களுடைய குறைபாடுகளை ஐந்து பேர் மாத்திரமே சொல்லக்கூடிய நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது சாத்தியப்படுமா என்ற எமக்குத் தெரியாது என்றும் இது ஜனநாயக விரோத செயல்.

இனிவரும் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிரான எவ்வித கருத்துக்களும் சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்ய முனைகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...