சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் நோக்கம் நிறைவேறி வருகிறது!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற நோக்கத்தை தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டை பொறுப்பேற்றார்.

அவர் தற்போது தமது பொறுப்பை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை சமையல் எரிவாயு வரிசை இல்லாதொழிக்கப்பட்டு வழமையான நிலை திரும்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியபோது நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நாட்டைப் பொறுப்பேற்பதற்காக அவர் பலகட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். எவரும் அதற்கு பதில் வழங்கவில்லை. அதனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் நாட்டை கையளித்துள்ளார் என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உர நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரத்தைப் பெற்றுக்ெகாள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...