tamilni 469 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி ரணில் டுபாய் பயணம்

Share

ஜனாதிபதி ரணில் டுபாய் பயணம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) கலந்துகொள்வதற்காக டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று(29) மாலை டுபாய்க்கு அவர் புறப்பட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) இன்று( 30) முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும்.

அதில் பங்கேற்பதற்காக ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சில அமைச்சர்கள் மற்றும் இலங்கை இளைஞர் சேவை மன்றத்தின் ஒரு குழுவும் தூதுக் குழுவாகச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நிதிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனும் பயணமானார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...