ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கு விஜயம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 78 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
“நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்“ என்ற கருத்திட்டத்தின் கீழ் இம்முறை பொது சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, கியூபாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள Group of 77 (G77) plus China உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கியூப விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.