douglas devananda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் முகத்தில் வெளிச்சத்தை கொண்டு வந்தவர் ரணில்! – டக்ளஸ் புகழாரம்

Share

எதிர்க்கட்சிகள் பொதுவாக எதிரிக்கட்சிகளாக செயற்படுகின்ற நிலைமை தான் பொதுவாக காணக்கூடியதாக இருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய இந்த நாடு தலைமைத்துவம் இல்லாமல் இக்கட்டான நிலையில் ஆதாள பாதாளம் நோக்கி விழுந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதனை தடுத்து நிறுத்தி அதை முன்னேற்ற பாதையில் கொண்டு போவேன் என்ற உறுத்திப்பாட்டோடு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுத்திருக்கின்றார்.

குறுகிய காலத்தில் இருட்டில் உள்ள எங்களிற்கு முகத்தில் வெளிச்சம் தெரிகிறது. அந்த வெளிச்சம் எமக்கு கிட்ட வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தான் இதனை நாங்கள் பார்க்க வேண்டும்.

கடந்த காலத்தில் பயங்கரவாத சட்டம் என்பது, ஒரு இனப்பிரச்சினை இருந்தபடியினால் அதனால் ஒரு பகுதி மக்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நாடு தழுவிய ரீதியில் நாட்டு மக்களிற்கான சட்டமாக தான் கொண்டுவரப்படுகின்றது.

இதற்குள் இனவாதமோ, மதவாதமோ இருக்காது ஆனால் இதுவரை முடிவாக இது எடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கிகாரத்துக்கூடாகத் தான் அது சட்டமாக்கப்படும்.

பல பேர் பலவிதமாக கதைக்கின்றனர். இந்த சட்டத்தை பார்த்து வாசித்திருக்க முடியாது. விரைவில் வெளியு வரும். பாராளுமன்ற வாத பிரதிவாதங்களிற்கு பின்னரே அது நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...