ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரவுள்ளதாகவும், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படக்கூடும் எனவும் சிங்கள நாளிதழொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிக்க தேசிய அரசொன்றை அமைக்கும் நோக்கிலேயே பிரதமர் பதவி விலகுகின்றார் எனவும், சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்காக பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதெனவும் தெரியவருகின்றது.
ரணில் விக்கிரமசிங்க 1994 ஆம் ஆண்டு முதல் 4 தடவைகளுக்கு மேல் பிரதமர் பதவியை வகித்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment