” ராஜபக்சக்களுக்கு பதவிகளை வழங்குவதற்கானதொரு ஒத்திவையாகவே சஷீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.” – என்று ‘உத்தர லங்கா சபாவ’ (மேலவை இலங்கை கூட்டணி) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தியவருக்கும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்சக்களின் அரசியலை நாட்டு மக்கள் நிராகரித்தனர். அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.
ஆனால் சஷீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னிணியில் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் சூத்திரம் செயற்படுகின்றது. அதாவது ராஜபக்சக்களுக்கு மீண்டும் பதவிகளை பெற்றுக்கொள்வதற்கான நகர்வே இது. சஷீந்திரவுக்கு இராஜாங்கம் வழங்கினால், நாமலுக்கு கட்டாயம் அமைச்சு பதவியொன்று வழங்கப்பட வேண்டும். இதுதான் அவர்களின் நோக்கம்.
அதேவேளை, எமது கூட்டணியில் மொட்டு கட்சிக்கு இடமில்லை. எனினும், மொட்டு கட்சியில் இருக்கும் – மனசாட்சியுடன் செயற்படும் தரப்புக்கு இடமளிக்கப்படும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment