FONRw7mhqnE0G1JSJ7JZ 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தளத்தில் மழை வெள்ளம் – 1012 பேர் பாதிப்பு!

Share

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை  காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இன்று மாலை வரை 274 குடும்பங்களைச் சேர்ந்த 1012 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கடமைநேர  அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாரக்குடிவில்லு மற்றும் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட செம்புக்குளி மற்றும் அங்குனவில உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், முந்தல் பிரதேசத்தில் தற்காலிக முகாம் ஒன்றும். அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் வசதி மற்றும் மருத்துவ சேவைகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தல் பிரதேச செயலகத்துடன் இணைந்து முப்படகயினரும், சுகாதார பிரிவினரும், பிரதேச சபை உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒன்றிணைந்து முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உதவிகளை செய்துவருகின்றனர்.

அத்தோடு, இன்னும் சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும், தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுருஓயாவின் 4 வான் கதவுகள் 2 அடி வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.

​#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஜாலிய விக்ரமசூரியவை
இலங்கை

 அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருக்கு பிடியாணை.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலை,மறைவாகியுள்ள, அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர்...

Semmani Manhole
இலங்கை

மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...

Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...