நுகர்வோர் விவகார அதிகார சபையால் சில பொருள்களுக்கான நிர்ணய விலை குறிப்பிட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய தனிநபர் வியாபாரங்களுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 1000 ரூபா அபராதம் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபா அபராதம் ஐந்து லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் இரண்டாவது தடவை அதிகூடிய விலைக்கு பொருள்கள் விற்பனை செய்தால் 2000 ரூபா தண்டப்பணத்துக்காக 20 ஆயிரம் ரூபாவும் 2 லட்சம் ரூபாவுக்கு 10 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
நிறுவனம் ஒன்றில் இந்தத் தவறு இழைக்கப்படுமாயின் 100 ரூபா தண்டப்பணம் ஒரு லட்சம் ரூபாவாகவும் ஐந்து லட்சமாக நிலவிய அபராதம் 50 லட்சமாகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படும்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டம் திருத்தமின்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையை அடுத்து இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a comment