“மாகாணசபை முறைமை என்பது இந்தியாவின் குழந்தையாகும். எனவே, அக் குழந்தை உயிருடன் இருக்கவேண்டும் என்பதையே அந்நாடு விரும்புகின்றது. அதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.” – என்று அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா விசேடமாக அழுத்தம் எதனையும் பிரயோகிக்கவில்லை. வழமைபோல கோரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று முழுமையாக நீங்கவில்லை. நாட்டு மக்கள் நிவாரணத்துக்காக காத்திருக்கின்றனர்.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமா அல்லது தேர்தல் முக்கியமா என சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களுக்கு முன்னுரிமை – முதலிடம் வழங்கப்பட வேண்டும்.”- என்றார்.
Leave a comment