நாட்டில் மஹிந்த அலையை உருவாக்கி, மஹிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களே தற்போது, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலக வேண்டும் கோஷம் எழுப்புகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கூறிவிட்டு, யாரை இவர்கள் அழைத்து
வரப்பார்க்கிறார்கள்? எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவையா, அநுரகுமார திஸாநாயக்கவையா,
சம்பிக்கவையா? அல்லது தங்களது மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவா மஹிந்தவை அவர்கள் விலகச் சொல்கிறார்கள்?
உண்மையில் எதிரணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமாக இருந்தால், அல்லது அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்ததாக நீங்கள்bநினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவாருங்கள்.
ஆளுங்கட்சியினர் சுயாதீனமாகச் செயற்படுவதாகக் கூறினாலும் எவரும் அரசிலிருந்து விலகவில்லை. அவர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களுக்கு சென்று அமரவில்லை. எவராவது தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவார்களாக இருந்தால், அதனை விட அவர்கள் பதவிகளில் இருந்து விலகுவதே நல்லது எனவும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment