Dinesh Gunawardena
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டு அரசு தொடர்பில் பிரதமர் விளக்கம்!

Share

கூட்டு அரசில் இணைந்து செயலாற்றுவதானால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இணக்கப்பாடு காணும் விடயங்கள், இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத விடயங்களை விட அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசு பல்வேறு சந்தர்ப்பங்களில் உருவாகக்கூடியது. கூட்டு அரசாங்கத்திற்கான சவால் நமது நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் உருவாகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், கூட்டு அரசாங்கம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிணைந்து செயற்படக்கூடிய அந்நியோன்ய நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெற்ற நாம் அனைவரும் அதன் மேலும் ஒரு படியாக நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

நாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டாலும் அல்லது பெற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய சவால் மற்றும் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்தினவிற்கும் இடையில் நடைபெற்றுள்ள கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...