3 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி இல்லம் சுற்றிவளைப்பு! – சொத்து இழப்பு 39 மில்லியன் என்கிறார் அஜித் ரோஹண

Share

மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு சுமார் 39 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” மேற்படி சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. பல குழுக்கள் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சிஐடியினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

24 பொலிஸார் காயம் அடைந்துள்ளனர். தேசிய வைத்தியசாலை, களுபோவில மற்றும் பொலிஸ் வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

போராடும் உரிமையை பொலிஸார் மதிக்கின்றனர். இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சம்பவங்களின்போது பொலிஸாருக்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.” – என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...