மிரிஹான பகுதியில் இடப்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைதான 54 பேருக்கும் ஆதரவாக சுமார் 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக ஆஜராகியிருந்தனர்.
நாட்டில் முதல் தடவையாக இவ்வாறானதொரு சப்பவும் இடம்பெற்றுள்ளது.
கதைன்னு சந்தேக நபர்கள் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுகேகொடை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்ற வாசலில் மிகப்பெரும் கைதட்டலுடன் வரவேற்கப்பட்டனர்.
குறித்த நபர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 21 பேர் தலா 100,000 ரூபா சரீர பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 6 பேர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கைதான சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment