கிராம சேவகர்களின் முறைகேடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்குப் புதிய நடைமுறை மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மையற்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) அறிவித்துள்ளது.
‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளைத் துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாகக் கூறி சில அவசர தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நேரடி இலக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தச் செய்தி போலியானது என்றும், ஜனாதிபதி அலுவலகம் அத்தகைய எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.