ஜனாதிபதி – ஐ.நா. பொதுச் செயலாளர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேர்ஸ் ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டம், நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பயணத்தின் ஜனாதிபதி நாட்டின் கல்வி விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் பல நாடுகளின் அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment