அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலக்கு வைத்து இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியில் இடம்பெற்றுள்ளது.
2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11 ம் திகதி நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்டனில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகம் பென்டகன் ஆகியவற்றை இலக்குவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
ஐ.நா. பொதுச்சபையின் 76வது கூட்டத் தொடரில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயோர்க் பயணம் மேற்கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கெளரவமளித்தனர்.
Leave a comment