4 39
இலங்கைசெய்திகள்

முடிவை அறிவித்த ஜனாதிபதி அநுர: பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

Share

முடிவை அறிவித்த ஜனாதிபதி அநுர: பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

எதிர்வரும் காலங்களில் பாதாள உலகத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) கூடிய 10வது நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்குள் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்தினுள் பாதாள உலக கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை நாட்டினுள் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் பெறும் அதிர்வலையை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட அவரின் சாரதி மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்  என மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, துப்பாக்கி சூட்டிற்கு உதவியதாக கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்வதற்காகவும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, அதற்கு பொதுமக்களின் உதவியும் காவல்துறையினரால் நாடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த சம்பவத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெறும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்து வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...