Thavisalar
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தவிசாளரை சிறைப்பிடித்த வலிமேற்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள்!!

Share

தவிசாளரை போராட்டத்திற்கு செல்ல விடாமல் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிறைப்பிடித்த சம்பவம் வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது.

வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்றையதினம் சபையின் உப தவிசாளர் சச்சிதானந்தம் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கான கோரிக்கையை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பொன்ராசா முன்வைத்தார்.

இந்த கோரிக்கை சபையில் முன்மொழிந்து வழிமொழிந்து ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஈ.பி.டி.பி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தவிர ஏனைய அனைவரும் சபையை விட்டு வெளியேறி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகினர்.

இதன்போது சபையை விட்டு வெளியேறாத ஏனைய உறுப்பினர்கள் உப தவிசாளரை ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல விடாமல் வற்புறுத்தி பலவந்தமாக மறித்து “போனவர்கள் போகட்டும் நீங்கள் சபையை நடத்துங்கள்” எனக்கூறினர்.

இதனால் செய்வதறியாது திணறிய அவர் சபையினை 14 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துவிட்டு, உப தவிசாளரும் சபையில் இருந்த கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் வெளியேறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் சபையை ஆரம்பிக்குமாறு உறுப்பினர்கள் கூறினர். ஆனால் தவிசாளரோ சபையை 14 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் உறுப்பினர்கள் கொந்தளித்து “பெரும்பான்மையாக இருக்கும் எங்களை கேட்காமல், 5 உறுப்பினர்களின் பேச்சைக்கேட்டு எப்படி சபையை ஒத்திவைப்பீர்கள்? நாங்கள் என்ன வீட்டிற்கா சென்றோம்,

ஆர்ப்பாட்டத்திற்கு தானே சென்றோம். இன்று 6 மணியாகினாலும் சபையை நடாத்தவேண்டும்” எனக்கூறி ஒரு மணத்தியாலத்திற்கும் அதிகமான நேரம் அவருடன் முரண்பட்டனர்.

பின்னர் அனைத்து உறுப்பினர்களும் ஒருவாறு சமாதானமாகி சபையிலிருந்து வெளியேறினர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...