Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பிற்போடப்பட்டது அமைச்சரவை பதவியேற்பு!

Share

இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை பதவியேற்பு பிற்போடப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் ஓரிருவர் இன்று மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியது.

ரோஹித அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியாராச்சி, காமினி லொக்குவே மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோரே இவ்வாறு பதவியேற்கவுள்ளனர் எனவும் கூறப்பட்டது. து.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பிரதமர் தவிர ஏனைய அனைவரும் அண்மையில் பதவி துறந்தனர்.

அதன்பின்னர் தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பீரிஸ், அலிசப்ரி ஆகிய நால்வருக்கு மட்டும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையிலேயே மேலும் சிலருக்கு இன்று அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் இன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....