istockphoto 1257951336 612x612 1
இலங்கைசெய்திகள்

நாட்டில் பரவலாக மழைக்கு சாத்தியம்!

Share

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை, நாளைமறுதினம் வரை தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல தளம்பல் நிலை உருவாகியுள்ள நிலையில், நாட்டின் அதிகமான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியம், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
l91920251128120058
செய்திகள்உலகம்

இம்ரான் கான் வெளிநாடு செல்ல அரசு அழுத்தம்: பிடிஐ செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் பரபரப்புத் தகவல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் (Adiala Jail) உயிரிழந்துவிட்டதாகச்...

images 18
செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலை: தடைப்பட்ட நீர் விநியோகம் இரண்டு நாட்களுக்குள் சீரமைக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் சபை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர்...

images 17
செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் அகப்பட்டு நீர்கொழும்பில் இருவர் உயிரிழப்பு

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்....

25 692d73f8ae775
செய்திகள்இலங்கை

முத்தயன்கட்டு வெள்ளத்தில் சிக்கிய ஏழு விவசாயிகளும் சிறுவனும் பத்திரமாக மீட்பு: கடற்றொழிலாளர்கள் குழு மனிதாபிமான உதவி!

முல்லைத்தீவு முத்தயன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில்...