Angajan Ramanathan
அரசியல்இலங்கைசெய்திகள்

புரட்சிகரமான வரவு – செலவுத் திட்டம்! -அங்கஜன்

Share

சிறப்பானதொரு பாதீட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் பாராட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ்.மாவட்டத்தில் மட்டும் 16 உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல யாழில் 6 நகரங்களை தரமுயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதந்திரத்துக்கு பின் இலங்கையில் கொண்டுவரப்பட்ட புரட்சிகரமான வரவு – செலவுத் திட்டமே இது.

கிராமிய பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. நடைமுறைக்கு சாத்தியமான விடயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் பிரதமரின் அனுபவங்களையும் உள்வாங்கி ஒரு சிறப்பான பாதீட்டை வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...