அரசியல்இலங்கைசெய்திகள்

இனி அத்தியவசிய தேவைகளுக்கே எரிபொருள் வழங்கப்படும்!!

Share

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருகிறது.

இதன்படி மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள், முப்படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தினசரி இழப்பு ரூ.100 கோடிக்கு மேல் என்றும் அவர் கூறினார். எனவே, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இல்லையெனில் இந்த மாதத்தில் ஏற்படும் நஷ்டம் அதிகரித்து, நிறுவனம் கடும் நிதிச் சரிவை சந்திக்க நேரிடும் என்றார்.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனையை சமர்ப்பித்துள்ளது.

ஒரு லிட்டர் பெற்றோல் ரூ.177க்கு விற்பனை செய்வதால், அதை ரூ.192 ஆக உயர்த்த வேண்டும் எனவும் ஒரு லிற்றர் டீசல் 121 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதால், அதை 169 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், வரலாற்றில் பெற்றோல், டீசல் விலை அதிகம் விற்பனையாகும் விலையாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...