மின் கட்டணத்தை அதிகரிக்க அரசியல்வாதிகள் முயற்சி!

Power cut

மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மக்கள் பலியாகக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் அடுத்த வருடத்தில் நாளாந்தம் 06 தொடக்கம் 08 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று(06) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version