மாணவிகளுக்கு அந்தரங்கப் பகுதியை காண்பித்த பொலிஸ்!!

Abused

பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்தார் எனக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகஹஹேன பகுதியைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியில் வைத்து சந்தேகநபர் காரில் இருந்தவாறு, பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்துள்ளார் என முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாணவிகள் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் பொலிஸ் நிலையத்தில் இது பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதியிலுள்ள CCTV கமராக்களை ஆய்வு செய்த நிலையில், சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version