16 2
இலங்கைசெய்திகள்

பொலிஸாருக்கு ஏமாற்றம் கொடுத்த தேசபந்து – 5 வீடுகளில் சுற்றிவளைப்பு

Share

பொலிஸாருக்கு ஏமாற்றம் கொடுத்த தேசபந்து – 5 வீடுகளில் சுற்றிவளைப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாக கூறப்படும் 5 வீடுகளை குற்றப் புலனாய்வு பிரிவு சுற்றிவளைத்துள்ளனர்.

சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்ற நிலையில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளில் மூன்று வீடுகளும் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் இந்த சுற்றிவளைப்பின் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை, வெலிகம, பெலேன பகுதியில் உள்ள W15 என்ற சுற்றுலா ஹோட்டலில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அதற்கு பழிவாங்கும் வகையில் வெலிகம பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி காயமடைந்த சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் ஆறு அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவிற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளைத் தொடங்கியது.

வெலிகம W15 ஹோட்டல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மகனான முகமது இஷாம் ஜமால்தீனுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...