அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவே பொலிஸ் நிலையத்துக்குள் இந்த பயங்கரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரே இன்று (25) காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.
அவருக்கு விடுமுறை வழங்காததால், ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜண்ட் சம்பவதினமான நேற்று இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது பொலிஸ் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்ததுடன் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
#SrilankaNews

