தலவாக்கலையில் 300 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலவாக்கலை – பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்தியதுடன், கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி உள்ளதாகவும், கொழுந்து விளைச்சல் குறைவாக உள்ள நிலையில் தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ தேயிலையைக் கட்டாயமாகப் பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருவதாகவும், போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தோட்ட அதிகாரி முறையாக தோட்டத்தை வழி நடத்தவில்லை எனவும் தெரிவித்து, தொழிலாளர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment