3 26
இலங்கைசெய்திகள்

குரங்குகள் மீது சுமத்தப்படும் தொடர் குற்றச்சாட்டுகள்! அரசாங்கத்தின் திட்டம் அம்பலம்

Share

குரங்குகள் மீது சுமத்தப்படும் தொடர் குற்றச்சாட்டுகள்! அரசாங்கத்தின் திட்டம் அம்பலம்

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,”கடந்த அரசாங்கத்தில் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் காணப்பட்டன. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீன விஜயத்தின் போது இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம்.

அதனால் தான் நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் குரங்குகள் மீது பழிசுமத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இவர்களுக்கு சிறந்த அரசியலில் ஈடுபட முடியும். ஆனால் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஆட்சி நினைத்ததைப் போல அன்றி, மிகவும் கடினமாகவுள்ளதாக ஜே.வி.பி.யினர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை மின்சாரத்துக்கான கேள்வி மற்றும் விநியோகத்தில் காணப்படும் சிக்கலே இதற்கான காரணமாகும். நுரைச்சோலையில் மின் பிறப்பாக்கிகள் 3 செயலிழந்துள்ளமையால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 மெகாவோல்ட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது

அவ்வாறெனில் அரசாங்கம் முதலில் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும். மின் சக்தி அமைச்சர் பொறியியலாளர் எனக் கூறுவது நகைச்சுவையாகவுள்ளது.

இவ்வாறு சமநிலையற்ற தன்மை தொடர்பில் மின்சாரசபை பொறியியலாளர்களால் முன்னரே அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.”என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...