WhatsApp Image 2024 07 05 at 17.47.03 scaled
இலங்கைசெய்திகள்

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க திட்டம்

Share

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க திட்டம்

சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதில் சுங்க அதிகாரிகள் தலையிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பொருட்களின் விடுவிப்பு பணிகளை மீட்டெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சியம்பலாபிட்டிய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...