மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட , நாட்பட்ட நோய் உடைய 30–60 வயதுக்குபட்டவர்கள், புற்றுநோய் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சினோபார்ம் தடுப்பூசியால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிடைக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கொரோனாத் தொற்றால் இறந்தவர்களில் 19 சதவீதமானவர்கள் இரு டோஸ்களையும் பெற்றவர்களே எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதன்படி இந்தக் கோரிக்கைக்கு அமைவாக மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment