இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களுக்கு எதிரான மனு விசாரணைக்கு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இவர்களுக்கு எதிராக குறித்த இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சாம்பியன் ஜூலியன் போலிங் உள்ளிட்டோரால் அதில் ஒரு அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்ட்டிருந்ததுடன், மற்றைய மனுவை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் மஹீம் மெண்டிஸ் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...