law
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆள்கொணர்வு மனு! – தீர்ப்பு ஜீலையில்

Share

இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்திரணி இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்த நிலையில், மீண்டும் திகதி இடப் பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

” யுத்தத்தின் கடைசிப் பகுதியில் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன் றத்தில் நேற்று (17) வழங்கப்பட இருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் முதலாம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஜுலை மாதம் முதலாம் திகதி நாம் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம்.” – எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...