tamilni 326 scaled
இலங்கைசெய்திகள்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.

அதன்படி, உரிய பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியாக்குமாறு கோரி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.

பல மதங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய,போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவர் நவம்பர் 29 அன்று நாட்டுக்கு திரும்பிய நிலையில் இரண்டு நாட்கள் வாக்குமூலங்களை வழங்கிய பின்னரே கைது செய்யப்பட்டார்.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டிற்கு வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் ஜெரோம் வந்த 48 மணி நேரத்திற்குள் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Share
தொடர்புடையது
arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள்...

Srilankan Airlines
இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.

இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...

dengue original
இலங்கை

சடுதியாக உயர்வடைந்தது டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033...