மத்திய வங்கியின் ஆளுராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
கீர்த்தி தென்னக்கோன் தனது மனுவில்,
கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் காலப்பகுதியில் பல பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் செயற்பட்டார். எனவே அவரே அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்.
இவற்றை கருத்திலெடுத்து அஜித் நிவாட் கப்ராலை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிப்பதுடன் அவரை மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதை தடுத்து கட்டளை பிறப்பிக்குக என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a comment