Sajith
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

மக்களின் வயிற்றில் நெருப்பு எரிகின்றது-சஜித்

Share

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா, மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் நன்றியறிதலின் முக்கியதுவத்தை எடுத்தியம்பும் பொங்கல் நாளில் தொடர்ந்தும் உங்கள் மதவுரிமையை பாதுகாப்பேன் என உறுதியளிக்கின்றேன்.

அவரவர் அடையாளத்தை பாதுகாப்பதும், ஏனைய மதத்தினரை மதிப்பதும் உயரிய மனித குணமாகும். அவ்வாறான குணவியல்பை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

எனது தந்தை பெருந்தோட்ட மக்களுக்கும் பிரஜா உரிமையை வழங்கி அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்தார்.

அவரே பிரஜா உரிமை என்ற முதலாவது போராட்டத்தை தொடங்கி வெற்றிப் பெற்றார். அதேபோல் பெருந்தோட்ட மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றும் இரண்டாவது போராட்டத்திலும் பிரேமதாசவின் மகன் வெற்றி பெற்று தருவார்.

சிலர் இன,மத, குல பேதங்களை பயன்படுத்தி என்னை சாடினர்.

அதை கண்டு நான் அச்சமடைய போவதில்லை. எனது ஆட்சியில் இன, மத, குல மற்றும் அடிப்படைவாதம் போன்ற பேதங்கள் இன்றி அனைவருக்கும் பொதுவானதொரு ஆட்சி நடக்கும்.

இன்று சில மதவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் மக்களின் துயரம் தெரிவதில்லை. ஆட்சியாளர்களுக்கும் இது தெரிவதில்லை.

காரணம் அவர்கள் கையில் கேஸ் வெடிப்பதில்லை, அவர்கள் கேஸ் வரிசையில் நிற்பதில்லை. அவர்கள் பசளையின்றி கஷ்டப்படவில்லை.

அவர்கள் அரசி, சீனி, எண்ணெய் வரிசைகளில் எப்போம் நிற்பதில்லை. அவர்களுக்கு ஒரு போதும் பால்மா பிரச்சினையில்லை அல்லவா?

காரணம் அவர்களுக்கு அவை எல்லால் அரண்மனைக்கு கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றது. தயவுச் செய்து விழித்துக் கொள்ளுங்கள்.

மதவாதம், பிரிவினைவாதத்திற்று மீண்டும் ஏமாற வேண்டாம். ஆகவே எமது தாய்நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் கைகோர்த்து செயற்படுவது அவசியம்

இயற்கை குளிர் காற்றை வழங்கினாலும் மக்களின் வயிற்றில் நெருப்பு எரிகின்றது. இன்று தரித்திரம் தலை தூக்கியுள்ளது.

இன்று இந்தியா மலையக மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குகின்றது.

இதற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆகவே பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். வேறு யாருக்கும் இது முடியாது’ என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...