வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெகு விரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வாரென அறியமுடிகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டின்போது இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று வருமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, நிலைமைகள் பற்றி பீரிஸ் தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது.
#SriLankaNews
Leave a comment