Katunayake Airportee
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் பி.சி.ஆர் சோதனை!

Share

இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஆய்வகத்தில் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பி.சி.ஆர். சோதனைக்கு 40 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளது. அதேநேரத்தில் இந்த ஆய்வகம்  ஒவ்வொரு மணிநேரமும் 500 சோதனைகள் அடங்கலாக நாளாந்தம்  7 ஆயிரம் சோதனைகளை மேறகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சோதனைகளின் முடிவுகள் 3 மணிநேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

அத்துடன் சுற்றுலாப் பணிகள் சாதகமான சோதனைகளை முடிவுகளை அளித்து கொரோனா வைரஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டிருந்தால் தனிமைப்படுத்தல் செயற்முறைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நடத்தப்படும் பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் பிசிஆர் சோதனைகளுக்கு 40 டொலர் செலுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...