pass
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு சேவை மீள ஆரம்பம்

Share

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் கடவுச்சீட்டு சேவைகள் நாளை (09) முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (08) முற்பகல் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கும் செயல்முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேச்சாளர், இன்று முற்பகல் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே கடவுச்சீட்டு விநியோகம் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...