Anushka Shetty
சினிமாபொழுதுபோக்கு

’அனுஷ்கா 17’ வைரலாகும் ஹேஷ்டேக்

Share

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் திரையுலகில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆனதை அடுத்து ’அனுஷ்கா 17’ என்ற ஹேஷ்டேக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகை அனுஷ்கா, நாகார்ஜூன் நடித்த ‘சூப்பர்’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். மாதவன் நடித்த ’ரெண்டு’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த அனுஷ்கா, அதன்பின் தமிழில் வேறு வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் அனுஷ்கா நடித்த ’அருந்ததி’ என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தான் அனுஷ்காவுக்கு தமிழிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

முதல்கட்டமாக விஜயுடன் அவர் ’வேட்டைக்காரன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து சூர்யாவுடன் ’சிங்கம்’ சிம்புவுடன் ’வானம்’ விக்ரமுடன் ’தெய்வத்திருமகள்’ கார்த்தியுடன் ’அலெக்ஸ் பாண்டியன்’, ரஜினியுடன் ’லிங்கா’ அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ ஆர்யாவுடன் ‘சைஸ் ஜீரோ’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் நவீன் பொல்லிஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் போஸ்டர் நேற்று அவருடைய பிறந்த நாளில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2005ஆம் ஆண்டு முதல் திரையுலகில் 17 ஆண்டுகள் பல வெற்றி படங்களை கொடுத்து வரும் அனுஷ்காவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...