ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உரப் பிரச்சினை மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டத்துக்கு பங்காளிக்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த கூட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட 52 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள், தம்மால் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை ஆளுந்தரப்புக்கு ஏற்கனவே அறிவித்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
#SrilankaNews
Leave a comment