நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் யோசனை தோல்வியை நோக்கி நகரும் நிலையிலேயே, மாற்று நடவடிக்கை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் ஓர் அங்கமாகவே நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான யோசனை பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றது.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவை வெளியிட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.
#SriLankaNews
Leave a comment