ranil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றம் அதன் கௌரவத்தை இழக்கும் நிலை! – எச்சரிக்கிறார் ரணில்

Share

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்குள் தீர்வை காணமுடியாமல்போய்விட்டால், நாடாளுமன்றம் அதன் கௌரவத்தை இழந்துவிடும். நாடாளுமன்றத்தின் பலமும் கேள்விக்குரியாகிவிடும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதி சபாநாயகர் தரப்புக்கு ஆளுங்கட்சியால் வேட்பாளர் ஒருவரை நிறுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் எதிரணியில் இருந்துதான் போட்டியிட்டனர். தனக்கு பெரும்பான்மை உள்ளதா என்பது அரசுக்கு தெரியவில்லை. பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் தகுதியானவர்கள். எனவே, வாக்கெடுப்பு முடிவை ஏற்று செயற்படுவோம். ராஜபக்சக்களை வெளியேறுமாறுதான் மக்கள் கோருகின்றனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாம் ஒன்றிணைந்து முன்னெடுப்போம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இந்தவாரமும் தீர்வை தேட முடியாமல் போனது. அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னர் தீர்வை தேட வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றம் கௌரவத்தை இழந்துவிடும். அதிகாரமும் இல்லாமல் போய்விடும். எனவே, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, முடிவை எடுக்கவும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...