721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Share

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம் , அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அது தொடர்பில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், அடுத்து சபை எப்போது கூடும் என்ற திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அந்த திகதி ஒரு மாதத்தை விஞ்சுதலாகாது. அந்தவகையில் ஓகஸ்ட் 03 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு சபை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கு கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி அண்மையில் அனுமதி கோரியிருந்தார். அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற வேண்டும். ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வை ஆரம்பித்து வைப்பார்.

அதேபோல நாடாளுமன்றத்தில் தற்போது இயங்கும் குழுக்கள் செயலிழக்கும். புதிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 13 3
இலங்கைஅரசியல்செய்திகள்

3,000 சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை: புதிய நடைமுறை மூலம் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் உள்ள நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000...

adhk150
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் அடக்குமுறைக்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சி போராட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வவுனியா மாவட்ட முன்னிலை சோசலிசக் கட்சி செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் சட்டவிரோதக் கைதுகள் மற்றும் பொலிஸ் அடக்குமுறைகளுக்கு...

download 4
உலகம்செய்திகள்

நியூ ஜெர்சியில் நடுவானில் மோதிய இரு உலங்கு வானூர்திகள்: ஒரு விமானி பலி, மற்றொருவர் படுகாயம்!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி (New Jersey) மாகாணத்தில் ஹெமில்டன் நகருக்கு மேலே இரண்டு உலங்கு வானூர்திகள்...

images 22 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் ஏதிலிகளுக்குத் தனித்துவமான கொள்கை அவசியம்: ‘தி ஹிந்து’ செய்தி முக்கியத்துவம்!

தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,...