sri lanka gold
இலங்கைசெய்திகள்

பராலிம்பிக் – இலங்கைக்கு முதல் தங்கம்

Share

டோக்கியோவில் இடம்பெற்றுவரும்  பராலிம்பிக்  2020 போட்டிகளில் இலங்கை முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளிப்படுத்தும் 16 ஆவது பராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில் 162 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றினர். இலங்கை சார்பாக 9 வீரர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்து இலங்கை சார்பாக முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் 67.79 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...