8156fbd7 28a9a3b4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பளை விபத்து – 11 மாணவர்கள் காயம்!

Share

கிளிநொச்சி – பளை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிப் பயணித்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில், மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றிப் பயணித்த வாகனமே, இன்று (03)  காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயக்கச்சி பகுதியிலிருந்து பளை நோக்கிச் சென்ற குறித்த கப் வாகனம், புதுக்காட்டு சந்தியை அண்மித்து ஏ9 பிரதான வீதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தின் பின்னாள் அமைக்கப்பட்ட பாதுகாப்புக் கூடாரம் வாகனத்தை விட்டு அகன்றபோது மாணவர்களும் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

விபத்தில் காயமடைந்த 11 மாணவர்களும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் . அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...