எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திருகோணமலை சிவன் கோவிலில் இன்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் கிழக்கு மாகாண விஜயம் இன்று ஆரம்பமாகின்றது.
முதலாவதாக திருகோணமலை மாவட்டத்துக்கு செல்லவுள்ள அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.இன்று காலை 8 மணிக்கு, திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு செல்லவுள்ள அவர், அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவார்.
அதன்பின்னர் நிலாவெளியிலுள்ள சாம்பல் தீவு தமிழ் மகா வித்தியாலயத்துக்கு டிஜிட்டல் உபகரணங்களை கையளிக்கவுள்ளார்.கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதகுப்பாதை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியும் வழங்கவுளளார்.மறுநாள் 4 ஆம் திகதி திருகோணமலை ஆயரை சந்திக்கவுள்ளார். அரசியல் கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.
#Srilanknews
1 Comment