நாடளாவிய ரீதியில் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்று முதல் திறக்கப்படவுள்ளன.
மாத்தளை, குருநாகல், கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிரதேச அலுவலகங்களே நாளை முதல் திறக்கப்படவுள்ளது என திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி காலை 9 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை இவ் அலுவலகம் திறக்கும் என கூறப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள் பெறும் தேவையுடைய பெறுநர்கள் மாத்திரம் தாம் வசிக்கும் இட அலுவலத்துக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனாத் தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அரசால் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு அமைய திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a comment